2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 11 வர்த்தகர்கள் கைது

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முத்திரை இடப்படாத நிறுத்தல் அளத்தல் கருவிகளைப் பயன்படுத்தியமை மற்றும்  நிறைகுறைந்த பாண் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் 11 வர்த்தகர்;களைக் கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.

அத்துடன், முத்திரை இடப்படாத நிறுத்தல் அளத்தல் கருவிகளையும் குறித்த வர்த்தக நிலையங்களிலிருந்து கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின்; வாழைச்சேனை, ஓட்டமாவடி, பாலமுனை, காத்தான்குடி, காங்கேயனோடை ஆகிய பகுதிகளிலுள்ள 50 வர்;த்தக நிலையங்களில் புதன்கிழமை (19) சோதனை மேற்கொள்ளப்பட்டன.

வெதுப்பகங்கள், மீன் விற்பனை நிலையங்கள், சில்லறைக் கடைகள், கருவாட்டுக் கடைகள்,  பழக்கடைகள் உள்ளிட்டவற்றில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X