Menaka Mookandi / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-எம்.ஐ.அப்துல் நஸார்
கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கொரிய நாட்டின் தூதுக்குழுவென்று, மட்டக்களப்பு மாநகர சபைக்கு வியாழக்கிழமையன்று (04) விஜயம் செய்தது.
“சமாந்தரமான பிராந்திய அபிவிருத்திக்கான சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு” என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மேற்படி தூதுக்குழுவினர், ஜூலை மாதம் 30ஆம் திகதியன்று, இலங்கைக்கான தமது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.
கொய்கா அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டைலான் டேவிஸ் தலைமையிலான இந்தத் தூதுக்குழுவிருக்கு, மட்டக்களப்பு மாநகர சபையில் சம்பிரதாயபூர்வ வரவேற்பளிக்கப்பட்டதோடு, மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பில், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமாரினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
கொரிய தூதுக்குழுவினர், பிரதேசம் பற்றியும் மாநகர சபையின் செயற்றிட்டங்கள் மற்றும் திண்மக் கழிவகற்றல் பொறிமுறை பற்றியும் கேட்டறிந்து கொண்டனர்.
தூதுக்குழுவினர் மாநகர சபையின் அலுவலகக் கிளைகளின் பணிகள் தொடர்பில் நேரடியாக கிளைகளுக்குச் சென்று உத்தியோகத்தர்களுடன் உரையாடி கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். கொரியத் தூதுக்குழுவினர், மட்டக்களப்பு விஜயத்தின் நினைவாக வருகை தந்த தூதுக்குழுவின் அங்கத்தவர்கள் 11 பேருக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன், மாநகர கணக்காளர் ஜோன் பிள்ளை, நிருவாக உத்தியோகத்தர் திருமதி.ஆர்.விக்னேஸ்வரன் ஆசிய மன்றத்தின் வதிவிடப் பிரதிநிதி திருமதி டினேஷா டி சில்வா, ஆசிய மன்றத்தின் பொருளாதார ஆளுகைப் பணிப்பாளர் கோபா குமார் தம்பி, ஆசிய மன்றத்தின் பிரதிநிதி எஸ்.சசிதரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் கிளைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொரிய தூதக்குழுவினரின் கல்விச் சுற்றுலா, எதிர்வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago