Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு வின்சண்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் 196ஆவது பாடசாலை தினத்தையொட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை மாணவிகளின் சைக்கிள் பவனி இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி ராஜகுமாரி கனகசிங்கம் இந்த சைக்கிள் பவணியை ஆரம்பித்து வைத்தார்.
இந்த சைக்கிள் பவனி பாடசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வீதி வழியாக சென்று மட்டக்களப்பு காந்தி பூங்கா வழியாக சென்று மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது.
இதன்போது, மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு முன்னாலிருந்து பாடசாலை மாணவிகள் நடை பவனியிலும் ஈடுபட்டனர். இந்தப் பவனியில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் பலரும் பங்குபற்றினர்.


7 minute ago
8 minute ago
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
28 minute ago
3 hours ago