2025 மே 02, வெள்ளிக்கிழமை

மணல் அகழ்வு; அறுவர் கைது

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்துக்குச் சொந்தமான பனிச்சங்கேணி வன இலாகா காட்டுப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 06 பேர், இன்று (10) கைதுசெய்யப்பட்டள்ளனரென, வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரும் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்களும் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மணல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் மேற்படி 06 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 03 உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் உத்தியோகத்தர் தெரிவித்தார். 

வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தலைமையில் மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில், மட்டக்களப்பு மாவட்ட வன அதிகாரி பிரனிப் சுரவீர, மாவட்ட உதவி வன அதிகாரி எம்.ஏ.அஜித் குரே, வன உத்தியோகத்தர்கள் ஆகியோரும் ஈடுபட்டருந்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X