Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
“மண்ணை மீட்போம் எனக் கூறி வாக்குக் கேட்டவர்கள் தற்போது பெட்டிப் பாம்பாக அடங்கிப் போயுள்ளனர்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
கடந்த காலத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருக்கின்றபோது ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டவர்கள் இப்போது பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கின்ற நிலைமையை காணக்கூடியதாக இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கையில், “புதிய அரசாங்கம் பொறுப்பேற்று இரு மாதங்கள் கூட கடப்பதற்கு முன்னர், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓர் அசாதாரண சூழல் உருவாகி வருவதாகத் தெரிகின்றது” என்றார்.
“மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பங்கிடாவெளிக்கு அண்மையில் காணப்படுகின்ற “இலுப்படிச்சேனை” என்று சொல்லப்படுகின்ற, நூற்றுக்கு நூறு சதவீதம் தமிழ் மக்கள் வாழ்கின்ற பாரம்பரியமான மண்ணில், அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் தற்போது தொல்லியல் இடங்களை அடையாளம் காணுகின்றனர்.
“இக்குழுவினர், உறுதிப் பூமியாக இருக்கின்ற தனியாரின் காணிகளை அடையாளங் கண்டு, அந்தக் காணிகளை சுவீகரிப்பதற்கான அல்லது அபகரிப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
“மட்டக்களப்பிலுள்ள அம்பிட்டிய சுமனரத்ன தேரர், மதகுரு போன்று இங்கு செயற்படவில்லை. அந்த இடங்களுக்குச் சென்று அடிதடிகளில் ஈடுபடுகின்ற ஒருவராக இருக்கின்றார். அங்கிருக்கின்ற அரசாங்க அதிகாரிகளைக்கூட அவர் மதிப்பதாகத் தெரியவில்லை” என ஸ்ரீநேசன் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
3 hours ago