2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மண்முனைப்பற்றுப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் காலமானார்

Suganthini Ratnam   / 2017 ஜூலை 09 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மண்முனைப்பற்றுப் பிரதேச சபைக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.அஹமட் லெவ்வை (வயது 74) இன்று அதிகாலை காலமானார்.
பாலமுனையிலுள்ள தனது வீட்டிலேயே, சுகவீனம் காரணமாக இவர் காலமானார்.

இவரின் ஜனாஸாத் தொழுகையும் நல்லடக்கமும் பாலமுனை நடுவோடையில் இன்று காலை நடைபெற்றது.

1994ஆம் ஆண்டு நடைபெற்ற மண்முனைப்பற்றுப் பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட இவர், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினராக 1994ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டுவரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X