2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு புதிய செயலாளர் நியமனம்

வா.கிருஸ்ணா   / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக மட்டக்களப்பு, குருக்கள்மடத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுமதியுடன் ஒத்துமாறல் அடிப்படையில், வெருகல் பிரதேச செயலாளாராகக் கடமையாற்றிய மாணிக்கவாசகர் தயாபரன், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய கே.குணநாதன் வெருகல் பிரதேச செயலகத்துக்கும் இடமாற்றம் பெற்றுசென்றுள்ளார்.

சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான மாணிக்கவாசகர் தயாபரன், 1991ஆம் ஆண்டு, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராக முதல் நியமனத்தைப் பெற்றுக்கொண்டதுடன், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு ,திறைசேரி, மாவட்ட செயலகம், மாகாண சபை உட்பட பல்வேறு திணைக்களங்களில் பல்வேறு உயர் பதவிகளை வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X