2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

‘மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில், மதத்தை மாற்றுவதற்கான செயற்பாடுகள் மிக விரைவாக இடம்பெறுவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும், அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் இவ்வாறான செயற்பாடுகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, கிழக்கில், மட்டக்களப்பு - பாசிக்குடா பகுதியிலேயே மதத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மிகவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவென, பிரதேசவாசிகள் எமக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

மதமாற்றத்தால், மக்களுக்கிடையி​ல் தேவையில்லாத பிரச்சினைகளும், மதம்மாறிச் சென்றவர்கள், ஏற்கெனவே, கடைபிடித்த மதத்தை நிந்திப்பதனால், வேண்டாத கசப்புணர்வுகள் ஏற்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதவழிப்பாட்டிடங்கள் இல்லாத போதிலும், சுனாமி வீட்டுத்திட்டத்தில் வீடொன்றில் வைத்தே, வழிபாடுகள் இடம்பெறுகின்றன. யுத்தம், சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, வறுமையின் கீழ் வாடுகின்ற மக்களை மிக இலாவகமாக, ஏமாற்றி மதத்தை மாற்றிவிடுவதாகவும், ஒரு சிறு குழுவினரே, இந்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

வீடொன்றில் ​வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது. எனினும், வீடொன்றில் வைத்து மதபோதனைகளை முன்னெடுப்பதற்கான எவ்விதமான அனுமதியும் கிராம ​அலுவலகரிடமோ, ஏனைய உரிய அதிகாரிகளிடமிருந்தோ, அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என அறியமுடிகின்றது.

யாருக்கும் எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு உரிமையுள்ளது. எனினும், அற்​பசொற்ப ஆசைகளைக் கூறியும், பலவந்தமாகவும் மதத்தை மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை நிறுத்தவேண்டுமென, அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .