2026 பெப்ரவரி 13, வெள்ளிக்கிழமை

மின்சாரக் கம்பியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு

Janu   / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி வனஜீவராசிகள் பாதுகாப்பு சுற்றுவட்டார காரியாலயத்திற்குட்பட்ட திக்கோடை கிராமத்திற்குள் புதன்கிழமை(11) உள்நுழைந்த காட்டு யானையொன்று மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளது. 

தற்போது அப்பகுதியில் பெரும் போக வேளாண்மைச் செய்கை அறுவடை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் வயலை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட மின்சாரக் கம்பியில் சிக்கியே குறித்த யானை மரணித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் மின்சார கம்பி வேலி நடப்பட்ட நபரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேசம் அதிகளவு காட்டு யானை தாக்குதலுக்குள்ளான பிரதேசமாக காணப்படுவதோடு, காட்டு யானைத் தாக்குதல்களால் அதிகளவு மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதோடு, மக்களின் பல சொத்துக்களும் சேதமாக்கப்படும் நிலையில் அவ்வப்போது இவ்வாறு காட்டு யானைகளும் உயிரிழந்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 வ.சக்தி     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X