2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மரஆலையில் திருட்டு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 03 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, செங்கலடி நகரிலுள்ள மர ஆலையொன்றில் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்; ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் புதன்கிழமை (02) இரவு திருடப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸில் அதன் உரிமையாளர் இன்று வியாழக்கிழமை காலை முறைப்பாடு செய்துள்ளார்.

சீவிலி, சுத்தியல், உளி உள்ளிட்ட உபகரணங்களே திருடப்பட்டுள்ளன.

வழமைபோன்று புதன்கிழமை இரவு மூடிவிட்டுச் சென்ற ஆலையை திறப்பதற்காக இன்றையதினம் காலை வந்தபோது, பின் கதவு திறந்திருந்தது. இதனைத் தொடர்ந்து உட்சென்று அவதானித்தபோது,
கதவு உடைக்கப்பட்டு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாகவும்  முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X