2025 மே 21, புதன்கிழமை

மரக்குற்றிகளை கடத்த முற்பட்டவர் கைது

நடராஜன் ஹரன்   / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகரைப் பகுதியிலிருந்து, ஓட்டமாவடிப் பகுதிக்கு சட்டவிரோதமான முறையில் வேப்ப மரக்குற்றிகளை வாகனமொன்றில் ஏற்றிவந்த நபரொருவரை,வாழைச்சேனைப் பொலிஸார், கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபரிடமிருந்து, ஒன்பது அடி நீளம் கொண்ட 18 வேப்ப மரக்குற்றிகளும்,  வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .