Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டிக் கிராமத்தில் ஒரு கிலோகிராம் மரை இறைச்சியைத் தன்வசம் வைத்திருந்த ஒருவரை, இன்று வெள்ளிக்கிழமை (05) கைதுசெய்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக காட்டு விலங்குகள் வேட்டையாடப்பட்டு அதன் மாமிசங்கள் விற்பனைக்காக எடுத்துவரப்;படுவதாக தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து திடீர் சோதனை மேற்கொண்டபோது மரை இறைச்சியை வைத்திருந்த சித்தாண்டிக் கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான குடும்பஸ்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இறைச்சிக்காக வேட்டையாடப்பட்ட மரை, மட்டக்களப்பு மற்றும் பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள தொப்பிகல (குடும்பிமலை) மலைப்பகுதிக் காடுகளில் இருந்து வேட்டையாடப்பட்டதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருக்கின்றது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago