2025 மே 02, வெள்ளிக்கிழமை

மாஞ்சோலைச்சேனையில் மாணவியின் சடலம் மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா, மாஞ்சோலைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த க.பொ.த உயர்தர மாணவியொருவர், அவரது வீட்டில் இருந்து இன்று (24) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (23) இரவு, தனது படுக்கை அறைக்கு நித்திரைக்குச் சென்ற இம்மாணவி, நேற்றுக் காலை உரிய நேரத்துக்குள் எழுந்து வராமையால், வீட்டார் சென்று பார்த்த போது, அவர் மரணித்த நிலையில் மீட்டப்பட்டுள்ளார்.

கிண்ணியா முஸ்லிம் மகளிர்  மகா வித்தியாலயத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற இம்மாணவி, கடந்த வருடம்  பரீட்சைக்குத் தோற்றியதோடு, இந்த வருடம் இரண்டாவது தடவையாவும்  பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளார்.

மேற்படி சம்வம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .