2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’மாணவர் ஒன்று கூடல் மண்டபம் வேண்டும்’

Editorial   / 2017 ஜூலை 03 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

1882ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட 135 வருட கால வரலாறு கொண்ட பாடசாலைக்கு, மாணவர் ஒன்று கூடல் மண்டபம் இல்லாதிருப்பது ஒரு பெருங்குறையாக இருந்து வருவதாக, ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் என்.இராஜதுரை தெரிவித்தார்.

'உயர்தர விஞ்ஞானப் பிரிவைக் கொண்ட 1 ஏபி பாடசாலையாக இருக்கும் கலைமகள் வித்தியாலயத்தில், தற்போது 500இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். இந்தப் பாடசாலையிலுள்ள கட்டிடங்கள் சுமார் 60 வருடங்களுக்கு மேல் பழையவையாக இருக்கின்றன.

'இந்தப் பாடசாலையில் மாணவர் ஒன்று கூடலுக்கான புதிய மண்டபம் இல்லாதிருப்பதனால், கல்வி சார்ந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு மாணவர்களின் வகுப்புக்களைக் காலி செய்து விட்டு அல்லது பாடசாலை வெளியில் கட்டாந்தரையில் அமர்ந்தவாறே இடம்பெறச் செய்ய வேண்டியுள்ளது' என, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X