2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மாமனார், மாமியாரை கோடாரியால் வெட்டிய மருமகன்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 31 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

மாமனாரையும் மாமியாரையும், மருமகன் ஒருவர் கோடாரியால் வெட்டிய சம்பவமொன்று, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடிமீராவோடை பகுதியில் நேற்று (30) இடம்பெற்றுள்ளது.

கணவன், மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாக மனைவியை விட்டு பிரிந்திருந்த கணவரே, வீடு புகுந்து மனைவியின் தந்தைக்கும் தாய்க்கும் இவ்வாறு கோடரியால் வெட்டியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மருமகனின் தாக்குதலுக்குள்ளான 62 வயதுடைய மாமனார் ஆபத்தான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மாமியார் தொடர்ந்தும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தக் கோரத் தாக்குதலை மேற்கொண்ட நபரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .