Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஜனவரி 02 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ்.சபேசன்
மாற்றுத் திறனாளிகளின் நலனோம்பு சேவைக்காக, மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் உதய ஒளி அமைப்பின் அலுவலகம், நேற்று முன்தினம் (31) திறந்து வைக்கப்பட்டதாக, அவ்வமைப்பின் தலைவர் கே.பாக்கியராசா தெரிவித்தார்.
நிகழ்வில், உதய ஒளி அமைப்பின் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு, அலுவலகத்தின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், மாற்றுத்திறனாளிகளது வாழ்வாதாரத்துக்காக அவர்களது குடும்பத்தினருக்கு ஒரு தொகுதி சுயதொழில்களுக்குரிய உபகரணங்களும் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.புஸ்பலிங்கம், பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் எம்.சுந்தர்ராஜன், பட்டிப்பளை பிரதேச சபையின் உறுப்பினர்கள் வீ. கிரேஸ்குமார், எஸ்.லோகிதராஜா, களுவாஞ்சிகுடி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் ரீ.வரதராஜன், மனித நேய காப்பகத்தின் தலைவர் கே.குபேந்திரன் உள்ளிட்டோரும் மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago