Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 15 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மின்சாரம் தாக்கியதில் 6 வயதுச் சிறுவன் பலியாகிய சம்பவமொன்று, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன ஊறணி பகுதியில் நேற்று (14) பதிவாகியுள்ளது.
மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் முன்றாவது பிள்ளையாகிய தரம் இரண்டில் கல்வி கற்கும் சிறுவனே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான்.
இவர்கள் வாழ்ந்துவந்த வீட்டை உடைத்து புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுவனின் தாய் மற்றும் சகோதரிகள் இருவருமாக இவர்களது வீட்டுக்கு அருகாமையிலுள்ள உறவினரின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.
இவ்வாறு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் வீட்டின் மின் இணைப்பு வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் குறித்த வீட்டுக்குள் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில் வீழ்ந்துளார்.
சிறுவன் வீழ்ந்து கிடந்ததைக் கண்ட உறவினர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சடலத்தை பார்வையிட்ட திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம், பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு, சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைய, உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
46 minute ago
48 minute ago
57 minute ago