2025 மே 23, வெள்ளிக்கிழமை

மியான்மார் வன்முறைக்கு எதிராக கவனயீர்ப்புப் பேரணி

Editorial   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், பைஷல் இஸ்மாயில்

நாட்டில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது மியான்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புகள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டுமென வலியுறுத்தும் கவனயீர்ப்புப் பேரணி, ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் நேற்று முன்தினம் பரவலாக இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டப் பொதுப் பணிகள் அமைப்பின் தலைவரும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல். முனாஸ் தலைமையில் அட்டாளைச்சேனை கோணாவத்தையில் இடம்பெற்ற பேரணியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் உட்பட பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த எஸ்.எல். முனாஸ்,

“மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் சுமார் 11 இலட்சத்துக்கும் அதிகமான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்கள் அங்கு 1,200 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருவதாக வரலாற்றுச் சான்றுகள் இருந்தும் அம்மக்களுக்கு குடியுரிமை வழங்க, மியன்மார் அரசு முன்வரவில்லை.

“குடியுரிமை இல்லாமையால் எந்த உரிமையும் அற்ற சமூகமாக மிகவும் மோசமான முறையில் பௌத்த தேசியவாத அமைப்புக்களாலும் மியான்மார் அரசாலும் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.

“ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது, பௌத்த தேசியவாத அமைப்புக்களினதும்  மியான்மார் இராணுவத்தினதும் வரம்பு மீறிய அட்டூழியங்கள், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

“அந்த நாட்டுக்குள் தொண்டு நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், விசாரணைக் குழுக்கள் யாரையும் அனுமதிக்க முடியாது என்று, அந்நாட்டு அரசு பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், அங்கு பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கும் மக்களின் சரியான நிலைமையைக் கண்டு அல்லது கேட்டறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X