Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீனின் விலையை, மீனவர்களே தீர்மானிப்பவர்களாக இருக்க வேண்டும்; இடைத்தரகர்கள் இருக்கக்கூடாதெனத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார், அதற்கான செயற்பாடுகளை மீனவர் கூட்டுறவுச் சம்மேளனம் மேற்கொள்ள வேண்டுமென்றார்.
மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் தொடர்பான விசேட கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
காலங்காலமாகப் பயன்பட்டு வந்த முறைகளிலிருந்து இரசாயனங்களைப் பயன்படுத்துவதாலேயே, வாவிகளில் மீன்களின் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
குளங்களைப் போன்று ஆறுகளில் மீன்குஞ்சுகளை விடுவது சாத்தியமில்லை எனினும், எதிர்காலத்தில் மீனவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் கண்டல் தாவரங்களைப் பாதுகாத்தல், அவை வளரக்கூடிய இடங்களில் நடுகை செய்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.
மேற்படி விசேட கலந்துரையாடலின் போது, 2001ஆம் ஆண்டு, ஜனவரி 15ஆம் திகதி வெளியான வாவிச் சட்டதிட்டங்களை அமுல்படுத்தல், மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளல், அனுமதியற்ற மீன்பிடியில் ஈடுபடுவதனைத் தடுத்து நிறுத்துவதற்கான விழிப்பூட்டல் நடவடிக்கைகளை எடுத்தல் உள்ளிட்ட 20 விடயங்கள் ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago