2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மீன்கள் திருட்டு ; மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, தேற்றாதீவு மற்றும் களுதாவளை கடலில் தமது மீன்கள் நாளாந்தம் திருடப்படுவதாகவும் திருடர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரி, இன்று (21) காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்றில் மீனவர்கள்  ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு, பூநொச்சிமுனை கடற்கரையோரம் ஒன்று திரண்ட காத்தான்குடி, கல்முனை, பூநொச்சிமுனை, வாழைச்சேனையைச் சேர்ந்த மீனவர்கள், சுலோகங்களைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி, காத்தான்குடி பிரதேச செயலகம் வரை ஆர்ப்பாட்டப் பேரணியாகச் சென்றனர்.

இம்மீனவர்களின் மீன்கள் தொடாச்சியாக மட்டக்களப்பு, தேற்றாதீவு மற்றும் களுதாவளை போன்ற கடலில் திருடப்படுவதாகவும் இது தொடர்பாக மாவட்ட கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளரிடம் பலமுறை முறைப்பாடு செய்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

தாம் நாளார்ந்தம் கடலில் பிடிக்கும் மீன்கள் இவ்வாறு திருடப்படுவதால் வாழ்வாதார ரீதியாகத் தாம் மிகவும் கஸ்டப்படுவதாகவும் திருடர்களை தாம் அடையாளப்படுத்தியும் இன்னும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்களிடையே இன விரிசலை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திருட்டு நடவடிக்கையை ஒரு குழு திட்டமிட்டு மேற்கொண்டு வருவதாகவும் உடனடியா இதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தன்போதுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தன்போது வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மிலிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் மீனவர்கள் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .