Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜூலை 10 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகரைப் பொலிஸ் பிரிவு, சின்னத்தட்டு,முனை களப்புப் பகுதியிலிருந்து இன்று (10) மீனவர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கந்தையா கயிலைநாதன் (வயது 56) என்பவரே, சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சின்னத்தட்டுமுனை களப்பப் பகுதியில் நேற்று மாலை (09) மீன்பிடிக்கச் சென்றவர், நெடுநேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்களும் சக மீனவர்களும் தேடுதலில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, சடலம் களப்பு நீருக்குள் கிடப்பது தெரிய வந்ததையடுத்து, சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இம்மீனவர் வலைவீசிக் கொண்டிருந்தவாறே மாரடைப்புக் காரணமாக களப்பு நீருக்குள் வீழ்ந்து மரணித்திருக்கலாம் என விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .