Freelancer / 2022 மே 30 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடலில் தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.
குறித்த மீனவருடன் சென்ற இரண்டு மீனவர்களும் இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை இயந்திரப் படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்ற மூவரில் வாழைச்சேனை - செம்மண்ணோடை ஹிஸ்புல்லாஹ் குறுக்கு வீதியில் வசித்து வந்த 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான எம்.சஹாப்தீன் என்பவரே படகிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.
தவறி விழுந்த நபரை கடற்படையினரும் மீனவர்களும் தேடி வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025