Princiya Dixci / 2021 ஜூன் 01 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன்
தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாலமீன்மடு, கல்லடிவேலூர் மற்றும் திருச்செந்தூர் ஆகிய 3 கிராம சேவகர் பிரிவுகளும் இன்று (01) காலை விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்ட மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாலமீன்மடு, கல்லடிவேலூர், திருச்செந்தூர், சின்ன ஊறணி, நொச்சிமுனை ஆகிய 5 கிராமசேவகர் பிரிவுகள் கடந்த 18ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், அப்பகுதிகளில் தொடர்ந்து எழுமாறாக அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் தொற்றாளர்கள் இனங்காணப்படாததையடுத்து, மேற்படி மூன்று பிரிவுகளை விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டன.
அதேவேளை, நொச்சிமுனை மற்றும் சின்ன ஊறணி ஆகிய இரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குக்கும் என, மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.


15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025