Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 ஜனவரி 16 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதேசத்தில் அவ்வப்போது தூண்டி விடப்படக் கூடிய இன, மத முறுகல்களைத் தடுப்பதற்கு, கிராம சேவையாளர்கள் முன்னாயத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், விழிப்புணர்வு வழங்கப்படவிருப்பதாக, தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று (16) கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் அனைத்து மதங்கள், இனங்களுக்கிடையில் நிலைத்து நிற்கக் கூடிய சகவாழ்வுக்கான செயற்றிட்டங்களில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள அனைவரும் சிரத்தை எடுக்க வேண்டுமென்றார்.
அந்தவகையில், தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை முனைப்புடன் செயலாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் உள்ளூர் சமாதானத்துக்கான இயலளவைக் கட்டியெழுப்பும் இன்னொரு படிமுறையாக, பிரதேசத்திலுள்ள கிராம சேவையாளர்களுக்கு மாவட்ட சர்வமத பேரவையின் செயற்பாடுகளைத் தெளிவுபடுத்துவதும், பிரதேசத்தில் அவதானிக்கக் கூடிய இன, மத முரண்பாடுகளை வளர விடாமல் முளையிலேயே கிள்ளியெறியக் கூடிய முன்னாயத்தங்களைச் செய்வது பற்றி அறிவூட்டுவதும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இத்தகைய விழிப்புணர்வுக்கென, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள கிராம சேவையாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
31 minute ago
33 minute ago