Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம்களைப் பார்த்தாவது, தமிழ் சமுகம், அரசியல் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டுமென, விவசாய நீர்ப்பாசன கிராமியப் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு - குருமண்வெளி பிரதேச மக்களது தேவைகள் குறித்து ஆராயும் விசேட மக்கள் சந்திப்பு, அமைச்சரின் பட்டிருப்பு இணைப்பாளர் கே.கண்ணன் தலைமையில், குருமண்வெளி எழுச்சி மண்டபத்தில் நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தமிழ் அரசியல் தலைவர்களிடம்தான் அரசியல் கற்றார்கள் என்று தெரிவித்ததுடன், ஆனால், காலப்போக்கில் தமது சமூகத்துக்கு எதையாவது செய்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில், அவர்களை விட்டுப் பிரிந்து, தமக்கான ஓர் அரசியல் பாதையைத் தெரிவுசெய்து கொண்டார்கள் என்றார்.
தற்காலத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்கள் பாரியளவில் அபிவிருத்தி அடைந்திருக்கின்றன எனவும் ஆனால், தமிழ் பிரதேசங்கள் இன்னும் கஷ்டநிலையில் உள்ளமைக்குத் தமிழ்த் தலைமைகளே காரணமெனவும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள், வருகின்ற அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதால், பாரிய அபவிருத்திகளைச் செய்ய முடிகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் போராட்டம், 60 வருடங்களைக் கடந்து விட்ட போதும், அப்போராட்டத்தால் எதையுமே அடையாமல் தமிழ் சமுகம் இருக்கின்றபோதும், இன்னும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருப்பதால் எதையுமே அடைந்துவிட முடியாதென்றும், அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago
7 hours ago