2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’முஸ்லிம்கள் பலமான சக்தியாக மாற வேண்டும்’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 29 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இந்த அரசாங்கத்துக்குள் முஸ்லிம்கள்  பலமான சக்தியாக மாற வேண்டும். அப்போதே, முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இதை விடுத்து ஜனாதிபதியை மாற்றி, அரசாங்கத்தை மாற்றி முட்டாள்த்தனமாக இந்தச் சமுதாயம் செயற்படக் கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

காத்தான்குடி கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட மெரின் றைவ் வீதியை புதன்கிழமை (28) மாலை திறந்துவைத்து, உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,'இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளை  எதிர்நோக்கியுள்ளனர்.

'முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளானது, ஆட்சி மாற்றத்தின் ஊடாக ஏற்படுபவை அல்ல. உலகம் பூராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட பிரச்சினைகள் இடம்பெறுகின்றன' என்றார்.  

'எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத்  தீர்வு காண்பதற்காக நாம் ஒற்றுமையாக  வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைமைகள், அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒற்றுமையாக வேண்டும்.

'தேர்தல் வரும்போது, விரும்பிய கட்சிகளை நாம் ஆதரிக்கலாம். ஆனால், அத்தேர்தல் காலத்தில்; நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியென்று கூறி, ஒருவரையொருவர் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லிம் தலைமைகள் மேடைகளைப் போட்டு ஒருவரையொருவர் ஏச வேண்டியதும் இல்லை.

'அனைத்து முஸ்லிம் தலைவர்களும் ஒன்றுபட வேண்டியுள்ளது. எனவே, முஸ்லிம்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X