Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கு, எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சரின் மெய்ப் பாதுகாவலர் மேற்கொண்ட துப்பாகிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில், நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில், இன்று (04) நடைபெற்றது.
இவ்வழக்கில் சாட்சியங்கள் தொடர்பில் இன்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இதுவரை ஒரேயொரு சாட்சியை மாத்திரம்தான் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய சாட்சியங்கள் தொடர்பில் உயிரிழந்தவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான ந.கமலதாசன், சுதர்சன் ஆகியோரால் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அடுத்த தவணையில் ஏனைய சாட்சியங்களை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக பொலிஸாரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, கொல்லப்பட்ட உறவினர்களின் இரத்த மாதிரியை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் பொலிஸாரால் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், சட்ட மருத்துவ வைத்திய அதிகாரியால் பெறப்பட்ட இரத்த மாதிரிகளைக்கொண்டு அது தொடர்பான விசாரணையை முன்னெடுக்குமாறு, பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
21-06-2021 அன்று, மட்டக்களப்பு, மன்ரேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக அவரது மெய்ப் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்திருந்தார்.
சாட்சியமளிப்பதற்கு சாட்சிகள் அச்சம்கொள்வதாகவும் கடவுளும் நீதவானுமே எங்களுக்கு நீதி தரவேண்டும் எனவும் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தாயார், ஊடகங்களுக்கு இன்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago
1 hours ago