Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 03 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.சரவணன், கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதியிலுள்ள மேய்ச்சல் தரைக் காணிகளை பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் அபகரித்துவருவதாகவும் அவற்றைத் தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறும், பிரதேச கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்தனர்.
2016ஆம் ஆண்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக இருக்கும் போது, நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டு, தடுத்து நிறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அவ் அத்துமீறல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகப் பண்ணையாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இது தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், வெலிகந்தையில் அமைந்துள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் வதிவிடத் திட்ட முகாமையாளர் அலுவலகத்துக்கு, இன்று (03) சென்று, அவருடன் கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடலின் இறுதியில், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பாதுகாப்புப் பிரிவினரைக் குறித்த இடத்துக்கு அனுப்புவதாகவும், ஆரம்ப விசாரணைகளை உடினடியாகவே ஆரம்பிக்க இருப்பதாகவும், முகாமையாளர் உறுதியளித்தள்ளார்.
அதனைத் தொடர்ந்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், எவ்விதத்திலும் அத்துமீறலுக்கு ஆதரவு வழங்கப்பட மாட்டாது என்றும் உறுதியளித்ததோடு, இது தொடர்பான முன்னேற்றங்களை என்னோடு பகிர்ந்து கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார் என்றும், துரைராசசிங்கம் தெரிவித்தார்.
7 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
19 Jul 2025