Editorial / 2018 மே 02 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

துஷாரா
நாட்டில் பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்ட தலைமைத்துவமாக, மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவம் காணப்படுகிறது எனத் தெரிவித்த, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் பி.எச்.பியசேன, அவரின் மூலமாகவே, இழந்தவை அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பட்டிருப்புத் தொகுதி மகுளூரில், பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கைகளை விளக்கி, புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, நேற்று (01) இடம்பெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “எமது பிரதேசம் எழுச்சி பெற்று, மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வாழ்வாதாரப் புரட்சி செய்யத் தயாராக முன்வர வேண்டும். ஏமாற்றத்தின் பின்னால், கடந்த காலங்களில் வெகுதூரம் சென்று விட்டோம். தாமரை மொட்டின் மலர்ச்சியே, எமது இனத்தின் எழுச்சியாகும்” என்றார்.
21 minute ago
22 minute ago
42 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
22 minute ago
42 minute ago
3 hours ago