2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முக்கொலைச் சந்தேகநபருக்கு 48 மணிநேரம் தடுப்பு

Kanagaraj   / 2016 ஜூலை 26 , மு.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

த.தவக்குமார், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்;ட காக்காச்சிவெட்டையில், சனிக்கிழமை இடம்பெற்ற முக்கொலைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை, 48 மணித்தியாலயம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்கு, நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற  நீதிபதி எஸ்.றிஸ்வி முன்னிலையில் நேற்றுத் திங்கட்கிழமை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

சனிக்கிழமை (23) இரவு இடம்பெற்ற சம்பவத்தில் ஒரு வயதும் 6 மாதங்களுமேயான பிரசாந்தன் சஸ்னிகாவும் அவருடைய தாயான பேரின்பம் விஜித்தா (வயது 24),  பேரின்பம் விஜித்தாவின் தந்தையான கந்தையா பேரின்பம் (வயது 56) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், பேரின்பம் விஜித்தாவின் கணவரான பிரசாந்தன் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த மூவரின் இறுதி கிரியைகளும் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X