Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 08 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சீட்டுப்பிடித்தல் மற்றும் சுயதொழில் வாய்ப்புக்காக வங்கி மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பணமும் பொருட்களும் பெற்றுத்தருவதாகக் கூறி கைம்பெண்களை நம்பவைத்து மோசடியில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டின் பேரில் 46 வயதுடைய பெண் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, ஒந்தாச்சிமடம் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தப் பெண், பொலன்னறுவை மாவட்டத்தின் மினுவாங்கொடைப் பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்தபோது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, பெரியகல்லாறு, எருவில், நீலாவணை, குறுமண்வெளி, ஏறாவூர் ஆகிய பகுதிகளில் கணவன்மார்களை இழந்த பெண்களிடம் சாமர்த்தியமாகப் பேசி தன்னை நம்பவைத்துள்ளார். இந்நிலையில், சீட்டுப்பிடித்தல் மற்றும் சுயதொழில் வாய்ப்புக்காக வங்கி மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பணமும் பொருட்களும் பெற்றுத்தருவதாகக் கூறி அவர்களிடமிருந்து பணத்தையும் தங்கநகைகளையும் வேறு பொருட்களையும் ஏமாற்றிப் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக களுவாஞ்சிக்குடி உட்பட பல பொலிஸ் நிலையங்களில் ஏற்கெனவே செய்யப்பட்ட முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மேலும் கணவனை இழந்த பெண்கள் சார்பாக தொண்டு நிறுவனங்கள், வங்கிகள் ஊடாக பணத்தைப் பெற்றுள்ளதுடன், சீட்டுக்கட்டுதல் என்ற போர்வையில் பல ஊர்களிலும் மோசடியில் சந்தேக நபர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
20 minute ago
2 hours ago