2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தைக் கிராமத்தில் வீட்டு முற்றத்தில்;; நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இம்மோட்டார் சைக்கிள் எரிவதைக் கண்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளரும் அயலவர்களும் தீயை அணைத்துள்ளனர்.

இது தொடர்பில் தம்மிடம் குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ள நிலையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X