2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மாணவர்களின் எண்ணிக்கையில் வருடாந்தம் வீழ்ச்சி

Suganthini Ratnam   / 2016 மார்ச் 02 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் பாலர் வகுப்புக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் வருடாந்தம் வீழ்ச்சி ஏற்படுவதாக அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மேற்கு மணிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப்போட்டி செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தில் 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இவ்வாண்டு பாலர் வகுப்புக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 289 பேர் குறைவாகவுள்ளனர்.  
 
மேலும், இந்த வலயத்திலுள்ள பல பாடசாலைகளில் 50 க்கும் குறைவான மாணவர்களே காணப்படுகின்றனர். இதனால், குறித்த பாடசாலைகளை மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது' என்றார்.
 
'மாணவர்களின் தொகைக்கேற்பவே  பாடசாலைகளுக்கான வளப்பகிர்வும் வழங்கப்படுகிறது. எனவே, இவ்வலயத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் பெற்றோர்கள், பிரதேசவாசிகள், சமூக ஆர்வலர்கள்; கவனம் செலுத்த வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X