Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் உருவாக்குதலுடன் அவர்களுக்கான புதிய முதலீடுகளை அடையாளங்காட்டி அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலான மாநாடு எதிர்வரும்; 26ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமர விக்கிரமவின் வழிகாட்டுதலின் கீழ் முதலீட்டு மற்றும் ஏற்றுமதி மன்றத்தின் ஏற்பாட்டில் இம்மாநாடும் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் உள்ளூர் முதலீட்டாளர்களை சர்வதேச வர்த்தக சந்தைக்குள் உள் நகர்த்துவது மற்றும்; முதலீடுகளை அதிகரித்தல் தொடர்பிலான பல்வேறு விடங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறை, ஏனைய தொழில் துறைகள் வளர்ந்து வருகின்ற இவ்வேளையில் முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் தொடர்பான விடயங்களையும் வர்த்தகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago