2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மின்கம்பி உரசியதால் தீப்பிடிப்பு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (16) திடீரென்று தீ பரவியதன்  காரணமாக பனைமரங்களும் மோட்டார் சைக்கிளொன்றும் எரிந்து நாசமாகியுள்ளன.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசுகின்ற பலமான தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்றுக் (கச்சான் காற்று) காரணமாக வீதியோரத்தில் நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்களின் கம்பிகள் ஒன்றோடொன்று உராய்ந்து தீப்பற்றி, அறுந்து  பனைமரங்களின் மீது விழுந்துள்ளன. இதனால், காய்ந்திருந்த பனை மட்டைகளில் இலகுவாகத் தீ பரவியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாகியுள்ளது.

இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டு குறித்த இடத்துக்குச் சென்ற தாம், தீயணைப்புப் பிரிவினர் மற்றும் மின்சாரசபை பிரிவினரை அழைத்து தீயை அணைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X