2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முனைக்காடு கிராமத்தில் நூலகத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேசச் சபை பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில், நூலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று திங்கட்கிழமை (31) இடம்பெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், 1,664,907.87 ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த கட்டடத்துக்கான அடிக்கல்லை, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல், பிரதேச சபையின் செயலாளர் கே. கிருஸ்ணபிள்ளை உட்பட சில அதிகாரிகளும் நாட்டி வைத்தனர்.

இந்தப் பிரதேசத்தின் நீண்ட காலக் குறையாகவிருந்த நூலக வசதி,  இதன் மூலம் நிவர்த்திக்கப்டும் என்று குறித்த பகுதியின் பொதுமக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .