2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

யானையின் சிதைவடைந்த உடலம் மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஜூன் 25 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு வன இலாகாப் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் - பதுளை வீதியை அண்டிய கித்துள் குளத்துக்கு அருகில், காட்டு யானையொன்றின் அழுகிய சடலமொன்றை, அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கித்துள் குளத்துக்கு அருகில் சென்ற மீனவர்கள், குறித்த யானையில் சடலத்தைக் கண்டு, சனிக்கிழமை (24) வழங்கிய தகவலுக்கு அமைய யானையின் சடலத்தை மீட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கக் கூடும் என்று கருதப்படும் இந்த காட்டு யானை, இயற்கையாக இறந்ததா அல்லது கொல்லப்பட்டதா என்பது பற்றிய விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக, அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இது பற்றிய விசாரணைகளை, வன இலாகா அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X