Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 28 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக பயிற்சிகளையும் கட்டுமானங்களையும் தொழில்நுட்பங்களையும் புதிய தொலை நோக்குகளையும் உருவாக்குவதற்காக தாம்; பணியாற்றிக்கொண்டிருப்பதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய அபிவிருத்திக்கான தலைமை ஒத்துழைப்புத் திட்டத்தின் முதற்செயலாளர் லிபுஸே சவுக்குபோவா தெரிவித்தார்.
பாரம்பரிய உணவு மற்றும் கைத்தொழில் பொருட்கள் மையத்தின் கட்டுமானம் மூலம் பெண் தொழில் முனைவோர் திறன்கள் மற்றும் சந்தை வாய்ப்பை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், செங்கலடியில் கிழக்கின் பாரம்பரிய உணவகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
செங்கலடியில் உள்ளூர் உற்பத்திகளை விற்பனை செய்யக்கூடிய 5 கடைத்தொகுதிகளும் சுமார் 100 பேர் அமர்ந்திருந்து உண்ணக்கூடிய உணவகமும் 17.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 45 பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், இவற்றில் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொண்டுள்ளனர்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இப்பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு இத்திட்டம் பேருதவி புரியும் என்பதுடன், பல்வேறு தொழிற்றுறைகளில் பயிற்சி அளிக்கப்பட்ட பெண்கள், தொழில் வாய்ப்பையும் தங்களது வாழ்வாதாரத்தையும் தேடிக்கொள்வதற்கு இத்திட்டம் உதவும்' என்றார்.
'மேலும், ஐக்கிய நாடுகளின் யூ.என்.டி.பி நிறுவனமும் பொருளாதார வலுவூட்டலில் மிக முக்கிய பங்காளி நிறுவனமாகும். அது அரசாங்கத்தின் இயலுமையைக் கட்டி வளர்ப்பதில் பங்காற்றி வருகின்றது.
அதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்டச் செயலகத்தோடு இணைந்து பல்வேறு திட்டமிடலின் படிமுறை வளர்ச்சித் திட்டங்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago