Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, சந்தனமடு ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர், புதன்கிழமை (03) மாலை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகிப் பலியாகியுள்ளார்.
சித்தாண்டி 1, பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்த குமாரன் யோகநாதன் (வயது 48) என்பவரே யானையின் தாக்குதலுக்குள்ளானார்.
வழமைபோன்று இவர் குறித்த ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு நீர் அருந்துவதற்காக வந்த யானை தாக்கியுள்ளது.
இரவாகியும் இம்மீனவர் வீடு திரும்பாமையை அடுத்து, அவரை உறவினர்கள் தேடியுள்ளனர். இதன்போதே குறித்த மீனவர் யானையின் தாக்குதலுக்குள்ளானமை தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago