Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
வா.கிருஸ்ணா / 2019 மார்ச் 26 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவிரு குடும்பங்களுக்கு அமைக்கப்பட்ட 39 வீடுகள், ஏப்ரல் 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளனவென, ரணவிரு சேவா அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச்.கீர்திகா ஜயவர்தன தெரிவித்தார்.
ரணவிரு சேவா சங்கத்தின் ஊடாக வீடுகள் வழங்கப்படவுள்ளவர்களுக்கான கூட்டம், மாவட்டச் செயலகத்தில், இன்று (26) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
'ரணவிரு சேவா' பயனாளிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 39 குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டு, பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
இவற்றின் திறப்பு விழாவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு, வீடுகளைக் கையளிக்கவுள்ளனார் எனவும் அன்றையதினம் 500 ரணவிரு குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் ரணவிரு சேவா அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago