Princiya Dixci / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பிரயாணித்த ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மட்டக்களப்பு - கருவப்பங்கேணி பிரதேசத்தில் நேற்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, புன்னைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய விக்கினேஸ்வரராஜா சதூசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞன், நேற்று முன்தினம் (23) இரவு கருவப்பங்கேணி பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்குச் சென்ற ரயிலில், கருவப்பங்கேணி பிரதேசத்தில் மோதி படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகினர்.
18 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
34 minute ago
1 hours ago