2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ரயில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

Editorial   / 2021 டிசெம்பர் 29 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் மோதியதில் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ரட்னகுமார் டினேஷ்ராஜ் (வயது 29) எனும் இளம் குடும்பஸ்தர், நேற்று (29) உயிரிழந்துள்ளார்.

மேசன் தொழிலாளியான இவர்,  தனது உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக இரவு 8.30 மணியளவில் ரயில் பாதையைக் கடக்கும் போது,  ரயிலில் மோதி உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நஸிர் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு,  விசாரணைகளை மேற்கொண்டார்.

மரணித்தவரின் குடும்ப உறவினர்களிடம் ஏறாவூர்ப் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X