2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக அந்த ரயில் நிலையத்தில் தடைப்பட்டிருந்த ரயில் சேவை, இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாக மட்டக்களப்பு ரயில் நிலைய பிரதம  அதிபர் எம்.பி.கபூர் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை காலை கொழும்புக்குப் புறப்படுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த உதயதேவி ரயிலுடன் ரயில் எஞ்சின் ஒன்று வந்து மோதி விபத்துக்குள்ளானது.  இதன்போது ரயில் எஞ்சின் ரயில் கடவையிலிருந்து தடம்புரண்டதுடன், உதயதேவியின் ரயில்  பெட்டி ஒன்றும் சேதமடைந்தது.

இதன் காரணமாக நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10.15 மணிக்கு மாகோவுக்குச் செல்லும் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டதுடன், மாலை 5.30 மணிக்கும் இரவு 8.15 மணிக்கும் கொழும்பு கோட்டைக்குச் செல்லும் ரயில் சேவைகள்; ஏறாவூர் ரயில் நிலையத்திலிருந்தே இடம்பெற்றது.

மேலும், இந்த விபத்துக் காரணமாக தடம்புரண்ட  ரயில் எஞ்சின் மற்றும் சேதமடைந்த ரயில் கடவையின்  திருத்த வேலை மாகோவிலிருந்து கொண்டுவரப்பட்ட இயந்திரங்களுடனான திருத்தல் செயலணி மற்றும் திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை ரயில் ஊழியர்களும் இணைந்து மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X