2025 மே 03, சனிக்கிழமை

ரூ.5,000 மோசடி; சமுர்த்தி உத்தியோகத்தர் பணிநீக்கம்

Editorial   / 2020 மே 06 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்திக் கொடுப்பனவில் மோசடி செய்ததாக, சமுர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தர் ஒருவர், ஏப்ரல் 24ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாரென, மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றிய குறித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கலில், 13 பேருக்கு தலா 4,000 ரூபாய் மட்டுமே வழங்கியிருப்பதாகவும் ஐவருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கவில்லை எனவும் காத்திருப்புப் பட்டியலிலுள்ள 50 குடும்பங்களுக்கு, சமுர்த்தி உணவு முத்திரை பெற்றுத் தருவதாக தலா 1,000 ரூபாய் இலஞ்சமாகப் பெற்றுள்ளாரெனவும் இவர் ஏற்கெனவே காணி மோசடியிலும் ஈடுபட்டுள்ளார் என முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மோசடி தொடர்பாக, கிரான் பிரதேச செயலாளரால் விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணையில் இவர் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாகக் கருதி, சமுர்த்தி மேலதிக பணிப்பாளர் நாயகமான மாவட்டச் செயலாளருக்கு, பிரதேச செயலாளர் அறிக்கை சமர்ப்பித்ததையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X