Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், ஆர்.ஜெயஸ்ரீராம்
தொண்டர் ஆசிரியர் தொடர்பில் வடக்கு மாகாணத்துக்க ஒரு சட்டமும் கிழக்கு மாகாணத்துக்கு மற்றுமொரு சட்டம் இருக்க முடியாதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசரியர்களுக்கு, கட்டம் கட்டமாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் போது, கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட சிங்கபாரதேப்பு சரஸ்வதி வித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு, நேற்று (11) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் செய்த குறைபாடு காரணமாக, கல்குடா, மட்டக்களப்பு மேற்கு ஆகியன ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்குவதாகத் தெரிவித்தார்.
எனினும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர் எனவும் இவ்விடயம் தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளர், ஆளுநர், மத்திய கல்வி அமைச்சரோடு பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றிய 445 தொண்டர் ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்க வேண்டுமென, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சந்தித்துக் கேட்டுள்ளோம்.
“வட மாகாணத்தில் இரண்டு தடவைகள் தொடண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீண்டும் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறன.
“வடக்கு மாகாணத்துக்கு ஒரு சட்டம், கிழக்கு மாகாணத்துக்கு வேறொரு சட்டம் என்று அல்ல. இதில் பாகுபாடு காட்டமுடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
6 hours ago