2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடிகான்கள் துப்புரவு பணிகள் ஆரம்பம்

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில், மழைகாலங்களில் ஏற்படுகின்ற வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு எதுவாகவுள்ள இயற்கை நீரோட்ட வடிகான்களை துப்புரவு செய்து, அவற்றை சீரமைக்கும் பணிகள், இன்று (09) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தின் உதவியுடன், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தலைமையில் வடிகான்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

ஆரம்ப நிகழ்வில், ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, இராணுவ உத்தியோகத்தர் கேர்ணல் சரத் குணசேகர ஆகியோர் பங்குகொண்டனர்.

அத்துடன், மாநகரசபை ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபை உறுப்பினர்களான க.ரகுநாதன்,ஐ.சிறிதரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். 

முதல் கட்டமாக, நேற்றைய தினம் சுமார் ஐந்து கிலோமீற்றர் நீளம் வடிகான்கள் துப்புரவு செய்யப்படவுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தெரிவித்தார்.

முட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 39 கிலோமீற்றர் நீளமாக வடிகான்கள் துப்புரவு செய்யவேண்டிய நிலையில் உள்ளதாகவும் பொதுமக்களும் இதற்கான பங்களிப்பை வழங்கவேண்டுமெனவும் மேயர் வேண்டுகோள் விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X