Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 09 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரிக்கு வடிவமைப்பும் தொழில்நுட்பவியலும் பாடநெறிக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஆசிரிய பயிலுநர்; மாணவர்களைப் பதிவு செய்து, உள்வாங்காமல் விட்டமை தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மாணவர்கள், சனிக்கிழமை (8) முறைப்பாடு செய்துள்ளனர்.
2014ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, 2016ஆம் ஆண்டை கல்வியாண்டாகக் கொண்டு, வடிவமைப்பும் தொழில்நுட்பவியலும் பாடநெறியைத் தெரிவு செய்த ஆசிரிய பயிலுநர் மாணவர்களை, மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரிக்கு உள்வாங்குவதற்கான நேர்முகப் பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது. இப்பரீட்சைக்குத் தோற்றியோரில் ஆசிரிய பயிலுநர் மாணவர்கள் 36 பேர், வடிவமைப்பும் தொழில்நுட்பவியலும் பாடநெறிக்குத் தெரிவாகினர்.
இம்மாணவர்களைப்; பதியும் நடவடிக்கை, கடந்த ஜுன் 21ஆம் திகதி கல்லூரியில் நடைபெற்றபோது, இவர்கள் பதிவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இப்பாடநெறியைத் தொடர்வதற்கு தமக்குப் போதிய தகுதி இல்லை என்ற காரணம் முன்வைக்கப்பட்டது என, பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறினர்.
நேர்முகப் பரீட்சையில் தாம் தெரிவுசெய்யப்பட்டு தமது பெயர் விவரங்கள் கல்வி அமைச்சின் விசேட கல்விப்பிரிவால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இதன்; பின்னரும், தாம் இப்பாடநெறிக்கு தாம் உள்வாங்கப்படாமை கவலையளிக்கின்றது எனவும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறினர்.
இது தொடர்பில் மேற்படி கல்லூரியின் பீடாதிபதி எஸ்.இராஜேந்திரனிடம் கேட்டபோது, இம்மாணவர் தெரிவில் சில குறைபாடுகள் காணப்படுவதால், விசேட தெரிவுக்குழுவை கல்வி அமைச்சின் விசேட கல்விப்பிரிவு நியமித்துள்ளது. இவர்களின் ; ஆவணங்களை அக்குழுவினர் பரிசீலித்து, தகுதியானோரை அப்பாடநெறிக்குத் தெரிவுசெய்வர்.
இம்மாணவர் தெரிவு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டதன் பிரகாரம், க.பொ.த சாதாரணதரம், உயர்தரப் பரீட்சைகளில் மாணவர்கள் சித்தி பெற்றிருப்பதுடன், அப்பாடநெறிக்கு அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10 மாதகாலப் பயிற்சியை முடித்த சான்றிதழும் மாணவர்களிடம் இருக்க வேண்டும். இதற்கான தகுதி பெற்ற மாணவர்களே தெரிவுசெய்யப்படுவர் எனக் கூறினார்.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் விசேட கல்விப் பிரிவின் அதிகாரியொருவரிடம்; கேட்டபோது, 'இது தொடர்பாக எமது பரிவால் விசாரணை நடத்தப்பட்டுள்ளன. தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சையை அக்குழுவினர் விரைவில் நடத்துவர்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
46 minute ago
1 hours ago