2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வந்தாறுமூலை வளாகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்; சுதந்திரமாகக் கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென்பதுடன், மாணவர்கள் மீதான வகுப்புத்தடையை நீக்கப்பட வேண்டுமெனக் கோரியும் மட்டக்களப்பு, வந்தாறுமூலை வளாகத்துக்கு முன்பாக அப்பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் பல்கலைக்கழக விஞ்ஞான மற்றும் முகாமைத்துவபீட மாணவர்கள்  28 பேருக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் 03, 06  மற்றும் 09 மாதங்கள் என்ற அடிப்படையில் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த திங்கட்கிழமை மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டபோதிலும் எவ்வித சாதகமான முடிவும் எட்டப்படவில்லை. இன்று மீண்டும் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எமது கோரிக்கைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக மாணவர்கள் கூறினர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X