Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 நவம்பர் 16 , பி.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் கோராவளி கிராம சேவையாளர் பிரிவில் வட்டவான் என்னும் கிராமத்தில் இன்று (16) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலாகாலமாக சேனைப்பயிர் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த தமது காணிகளில், வன இலாகா திணைக்களத்தால் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடாகி இருப்பதை தடுக்க கோரியே, மக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்
போராட்டத்தில் விவசாயிகளும் சேனைப்பயிர்ச் செய்கையாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதிகளில் நீண்டகாலமாக மக்கள் சேனைப்பயிர்ச் செய்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்மூலமே குறித்த பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் சேனைப்பயிர்ச் செய்கை காணிகள் மற்றும விவசாய காணிகளில் வன இலாகாவினால் மரங்கள் நடும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கையை தடுத்து நிறுத்தி, தமது விவசாய காணிகளை பாதுகாக்குமாறு அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டுசென்ற போதிலும் யாரும் கவனத்தில்கொள்ளாத நிலையிலேயே, போராட்டத்தில் குதித்தாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
55 minute ago
1 hours ago