Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்ற போது, வியாபார நடவடிக்கையில் ஈடுபடவுள்ள வியாபாரிகள், விசேட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று, அறவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்தில், இது தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மேற்படி கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில், மாவட்ட செயலாகக் கேட்போர் கூடத்தில், இன்று (19) நடைபெற்றது.
இதன்போது, மாவட்டத்தில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் வேளைகளில், மதுபானசாலைகள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், அழகுக்கலை நிறுவனங்களைத் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவைத் தவிர்ந்த, மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் வர்த்தக நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வியாபார நிலையங்கள், சமூக இடைவெளியை பேணுவது அவசியம் என்றும் கடைக்குள் ஐவர் மாத்திரமே இருத்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றமை தொடர்பில், உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் பின்பற்றாதவர்களை எச்சரித்தல், தொடர்ந்தும் அறிவுறுத்தலை பின்பற்ற மறுப்போரின் வர்த்தக நிலையங்களை மூடிவிடும் அதிகாரத்தை, மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி, அவ்வப்பகுதி உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கியிருப்பதாக, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மேலும் தெரிவித்தார்.
சிகையலங்கார நிலையங்களுக்கு வருகை தருவோர், வீடுகளிலிந்து பாதுகாப்பு அங்கிகளைக் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில்லறைக் கடைகளில், மக்களுக்கு தேவையான அளவு அரிசிகளை தட்டுப்பாடின்றியும் வைத்திருக்க வேண்டும் எனவும் சிவப்பு வெள்ளை நாட்டரிசியை ஒருபோதும் வெளிமாவட்டங்களுக்குக் கொண்டுசெல்ல முடியாதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கீரிச்ச்சம்பா இன அரிசியை மாத்திரம் அவ்வப்பகுதி பிரதேச செயலாளரரின் சிபாரிசில், பொலிஸ் அனுமதிப்பத்திரம் பெற்று வெளிமாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல முடியுமென்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
36 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
3 hours ago